கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு குறித்து அந்த நாட்டிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளது.
தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாகி. முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் அளித்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ள தகவல்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒரு செய்தி நிறுவனத்தின் நிருபர் கேள்வி கேட்டிருந்தார். “இந்த தகவல்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, அதனால் இந்தத் தகவல்களை வெளியிட முடியாது” என மத்திய அமைச்சகம் பதில் அளித்துள்ளது.