அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.இதற்காக கண்ட பொருட்களை பயன்படுத்தி அழகை பாழாக்கி கொள்ள வேண்டாம்.நமது வீட்டில் உள்ள கோதுமை மாவை வைத்து சரும நிறத்தை மாற்றும் சூப்பர் க்ரீம் தயாரித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கோதுமை மாவு – இரண்டு தேக்கரண்டி
2)நெய் – அரை தேக்கரண்டி
3)பால் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான நெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலக்க வேண்டும்.
**பிறகு இந்த பேஸ்டை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் சரும அழுக்குகள்,இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 50 கிராம்
2)கஸ்தூரி மஞ்சள் தூள் – இரண்டு தேக்கரண்டி
3)பால் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் 50 கிராம் பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் எடுத்து பாதாம் பருப்பு பொடியில் போட்டு நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பருப்பு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இரண்டு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.
**இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் காய வைத்து சுத்தம் செய்து வந்தால் சருமம் பளபளப்பாக மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)கோதுமை மாவு – மூன்று தேக்கரண்டி
2)தேன் – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த கோதுமை மாவு மூன்று தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் கலக்க வேண்டும்.அடுத்து இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து பேஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**இந்த பேஸ்டை சருமத்தில் அப்ளை செய்து ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு உலர விட வேண்டும்.
**பின்னர் தண்ணீர் கொண்டு சருமத்தை க்ளீன் செய்தால் சரும பளபளப்பு அதிகரிக்கும்.