காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Hasini

காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்!

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலீபான்கள் போர் செய்து வந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இங்கு கடந்த 15ம் தேதி முதல் இவர்கள் அதிகாரம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஆனாலும் இன்னும் யார் ஆட்சி அமைப்பது என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளாகவே போய்க்கொண்டிருக்கின்றன. இந்த பரபரப்பான  நிலையில் உலக மக்கள் அனைவரும் கதிகலங்கி போய் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறுவதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக தன் நாட்டு மக்களை வெளியேற்ற உலக நாடுகள் பலவும் முயற்சித்து வருகின்றன. எனவே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் விமானங்களின் மூலம் தன் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர். அதேபோல் அவர்களை மீட்டு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 26 ம் தேதி காபூல் விமான நிலையத்தின் வெளியே ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீரென்று நடத்திய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் உலக மக்களின் மனதை, உலுக்குவதாக உள்ளது. இதில் மொத்தம் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்லப் பட்டார்கள். இந்த தாக்குதல் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை பழி வாங்கியே தீருவேன். சும்மா விடமாட்டேன் என அதிபர் ஜோ பைடன் சொல்லியுள்ளார்.

எனவே அதன் காரணமாக அவரும் பதில் தாக்குதல் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காபுலில் மீண்டும் குண்டு வெடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் மட்டும் கேட்டது என  ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கூறியதாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனினும் இது குறித்து இன்னும் விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.