அறிவாலய சுயரூபத்தை அனைவரும் அறிவர்! அண்ணாமலை கடும் விமர்சனம்!

0
86

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான உத்தரவாதம் அளிக்கும் ஒரு மசோதா அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும், விவசாயிகளுக்கும், எதிரான கார்ப்பரேட் கம்பெனிகள் தமிழர்களுக்கு சாதகமான விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பு அளிப்பது என தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தச் சட்டத்திற்கு ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் ஆட்சி அமைத்தவுடன் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். அதிமுக வெளிநடப்பு செய்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய வலைப்பக்கத்தில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

தானாக விவசாயிகள் யாரும் இந்த கட்டங்களை எதிர்க்கவில்லை உண்மையில் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டிருக்கும் போது தமிழக மக்களுக்கு இது அறிவாலயத்தில் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும் என கூறியிருக்கிறார் அண்ணாமலை.