இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

Photo of author

By Kowsalya

இன்று சனி மகா பிரதோஷம் . இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்!

முப்பது முக்கோடி தேவர்களும் பிரம்மா விஷ்ணு ஆகிய வரும் இன்று சிவனை வணங்கி அவரது நல்லாசி பெறுவார்கள். நாமும் இந்நாளில் இறைவனை தொழுது நல் ஆசியை பெறவேண்டும்

சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர். அவருக்கு அபிஷேகம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.எனவே மகா பிரதோஷ நாட்களில் அவரை பூஜித்து நந்தியையும் பூஜித்து வணங்கினால் முற்பிறவி கர்ம வினைகள் நீங்கும் என்பதே உண்மை.

வில்வ இலை சங்குப்பூ வைத்து அவரை அபிஷேகம் செய்து வணங்கினால் அவர் அனைத்தையும் கொடுப்பார்.

உலகை  காத்து நன்மையும் தீமையும் வழங்கி அதற்கேற்ற பலன்களையும் தந்தருளி நம்மைக் காத்தருளும் இறைவனை இன்று பிரதோஷ வழிபாடு செய்து நன்மையை பெறுங்கள்.

சிவபெருமான் நஞ்சு உண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அவர் நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமையாகும். அதனால் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் வலிமையானது.

இந்த சனி மகா பிரதோஷத்தில் சிவன் பார்வதியுடன் வலம் வருவாராம் .அந்த வலம் வறும் காட்சியை மூன்று முறை படுத்தி சுற்றுவார்களாம்.அந்த மூன்று முறை நாம் தரிசிக்கும் பொழுது நமக்கு அனைத்து சகல சௌகரியத்தையும் அவர் தருவாராம்.

சனிப்பிரதோஷம்களில் சிவபெருமானை வணங்கும் பொழுது சனிபகவானின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். ஏழரை சனி ,அஷ்டம சனி, கண்டக சனி என பல சனி பகவான் தரும் துன்பங்களையும் இவர் போக்குவார்.

நீங்கள் சிவபெருமானுடைய அருளைப் பெறுவதற்கு பிரதோச நாட்களில் காலையில் எழுந்து நீராடி திருநீறு அணிந்த சிவபெருமானின் மந்திர நாமம் ‘ஓம் நமச்சிவாய’ சொல்லி பிரதோஷம் முடியும் வரை விரதம் இருந்து பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து ஈடுபட்டு வணங்கி பிரதோஷம் முடிந்தவுடன் உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு பதினாறு பிரதோஷங்கள் செய்யும்போது அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஒரு சனி மஹா பிரதோஷம் அன்று நீங்கள் சிவன் கோயில் சென்று வணங்கினால் ஐந்து வருடம் தினமும் சிவ பகவானை வணங்கிய புண்ணியம் கிட்டுமாம்.

மகா பிரதோஷ நாட்களில் விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

1.பிரதோஷ வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் கைகூடும் வலிமை பெருகும் சகல சௌபாக்கியம் கிட்டும் வறுமையிலிருந்து விடுபடலாம்.

2. பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்தால் சிவனது பேரருள் கிட்டும்.

3. சிவபெருமானைத் தொடர்ந்து வணங்கியவர்கள் மறுபிறவியிலும் நன்மைகளை அடைவது சாத்தியம்.

4. பிரதோஷ நாட்களில் சிவ பெருமானை சென்று வணங்கினால் நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவார்.

5.சிவபெருமான் ஒரு அபிஷேகப்பிரியர் என்பதால் தங்களால் முடிந்த அளவிற்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோயிலுக்குச் சென்று அபிஷேகம் செய்யுங்கள் மிகவும் நல்லது.

‘ஓம் சிவாய நம’ என்று 108 முறை தினமும் சொல்லுங்கள் உங்களது வாழ்வில் துன்பங்களே கிடையாது. அவனது அருள் உங்களை விரைவில் வந்தடையும்.