IPL 2025: 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் கிடையே நடைபெற்ற போட்டியில், 103 ரன்களை கொல்கத்தா அடித்தது. அதன் இலக்கை கூட பஞ்சாப்பால் எட்ட முடியவில்லை.இந்த வருடம் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனி திறமையை காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் தான் கொடி கட்டி பறக்கின்றனர். பிசிசிஐ சில விதிமுறைகளுக்கு தளர்வு விட்டுள்ளது.
குறிப்பாக பந்தில் எச்சில் தடவும் முறைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் சமி உள்ளிட்டோர் பலரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். பந்தில் எச்சில் தடவுவதால் ஸ்ப்ரிங் செய்வது எளிதாக இருக்கும், அதன் வீச்சு வேறு மாறியாக இருப்பதாக சமி தனது கருத்தை முன் வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறியதற்கு முழுவதும் மறுப்பு தெரிவித்து ஸ்டார்க் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
பந்தில் எச்சை தடவுவதால் எந்த வித்தியாசமும் இருக்காது. எச்சிலுக்கும் வியர்வைக்கும் என்ன இருக்கிறது. சிகப்பு பந்தில் தடவினால் கூட ஏதாவது மாற்றம் இருக்கலாம், ஆனால் வெள்ளை பந்தில் தடவுவதால் எந்த மாற்றமும் இருக்காது. சமி, மோகித் சர்மா போன்றோர் பந்தில் எச்சில் தடவுவது குறித்து கூறுவது ஒரு கட்டுக் கதை என தெரிவித்துள்ளார். இப்படி பிலேயேர்ஸ் குள் பேச்சு மோதல் உண்டாகியுள்ளது. இதனை கவனித்து வரும் ரசிகர்கள் எது உண்மை என்பதை ஆராய்ந்து கூறும் படி கேட்டு வருகின்றனர்.