ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன?

Photo of author

By Vinoth

ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன?

ப்ளு சட்டமாறனின் உருவபொம்மையை தாக்கி சில ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

கோலிவுட் திரை உலகினர் பெரும்பாலானோர்க்கு பிடிக்காத ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது அனேகமாக புளூசட்டை மாறன் ஆகத்தான் இருக்கும். சிறிய நடிகர்கள் முதல் மாஸ் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்கள் நடிக்கும் படங்களை எந்தவித வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல் கழுவி கழுவி ஊற்றி அவர் செய்யும் யுடியூப் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படம் பார்க்கிறார்களோ இல்லையோ இவரின் காட்டமான விமர்சனங்களுக்காக வாரவாரம் இவரது வீடியோவை பார்க்கும் லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திஅ மாறன் விமர்சனம் செய்தார். அதுபோலவே அந்த திரைப்படம் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லை எனவும், பார்த்திபன் தவறாக ப்ரமோட் செய்கிறார் என்றும் குற்றச்சாட்டை வைத்தார்.

இதையடுத்து பார்த்திபன் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் ப்ளு சட்ட மாறனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்நிலையில் வாக்குவாதம் முற்றிப்போய் ஒரு சில பார்த்திபன் ரசிகர்கள் இப்போது ப்ளுசட்ட மாறனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்தியும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.