முதல்ல ஒழுங்கா நடிங்க.. மண்ட பத்தரம்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன் – விஜய் ஆண்டனி.!

Photo of author

By Vijay

முதல்ல ஒழுங்கா நடிங்க.. மண்ட பத்தரம்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன் – விஜய் ஆண்டனி.!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இறுதியாக விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி ஜானர் படமான ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரம்ஜான் தினத்தில் வெளியானது. முன்னதாக இந்த படத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படம் வெளியாகி ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வழக்கம்போல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தையும் கழுவி ஊற்றி விமர்சனம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து அவரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி, “ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலர் பேச்சை கேட்டு ரோமியோ போன்ற நல்ல படத்தை கொண்டாடாமல் விட்டு விடாதீர்கள். ரோமியோ படத்தை பாருங்கள் அன்பே சிவம் படத்தை போல ஆக்கிவிடாதீர்கள்” என கூறியிருந்தார்.

உடனே இதற்கு ப்ளூ சட்டை மாறன், “இறுதியாக ரத்தம், கொலை என பல ப்ளாப்களை கொடுத்த இவர் இந்த படத்தை எப்படியாவது ஓட்டவேண்டுமென முதலிரவில் மனைவி சரக்கடிப்பது போன்ற வித்தியாசமான போஸ்டரை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடினார். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதால், இப்போது விமர்சகர்களை சீண்டி வருகிறார்.

முதலில் ஒழுங்கா நடிக்க கத்துக்கோங்க. இயக்குனர் எடிட்டர் வேலையில தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. தப்பு தப்பா பரமோசன் ஐடியா தர்ற அல்லகைகளை விரட்டி விடுங்க. உங்கள மாதிரி அப்பாவிகளை அழகா மொட்டை அடிச்சிருவாங்க. மண்ட பத்ரம்” என பங்கமாக கலாய்த்து பதிலடி கொடுத்துள்ளார். இவர்களின் இந்த சண்டை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.