சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. பழனிச்சாமியுடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தார்கள். எனவே, அதிமுகவுடன் பாஜக கூட்டணை அமைக்கிறது என பலரும் பேசினார்கள்.
ஆனால் ‘மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்தார். ஆனால், கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி ஆனால், இன்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா ‘அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
இந்நிலையில், விஜயின் அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் யுடியூபர் மற்றும் சினிமா விமர்சகருமான புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் அமித்ஷா சொன்ன தகவலை பதிவிட்டு ‘உண்மையான பாசிசமும், பாயாசமும்… 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக. பிரச்சார நேரத்தில்..மசூதி வாசல்களில் நின்று வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக அமைச்சர்கள் உட்பட அனைவரையும் விரட்டி அடித்தனர் இஸ்லாமியர்கள். அதிமுக தேர்தலில் தோற்றது.
இப்போது சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல. விஜய்க்கு உண்மையாகவே திராணி இருந்தால் இதை விமர்சிக்க வேண்டும். ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை. அதிமுக பாயாசம் என்றால் NDA எனும் பாயாச அண்டாவில் மிதக்கும் ஜவ்வரிசிதான் இந்த தவெக’ என பதிவிட்டிருக்கிறார்.