Gangers movie: சுந்தர் சி இயக்கத்தில் அவரும் வடிவேலுவும் இணைந்து நேற்று வெளியான படம்தான் கேங்கர்ஸ். 15 வருடங்களுக்கு பின் சுந்தர் சி-யுடன் வடிவேலு இணைந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் பற்றி விமர்சனத்தை பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த படத்தோட கதை என்னன்னா. ஆரம்பத்துல ஒரு ஸ்கூலை காட்டுறாங்க.. அதுல ஒரு சின்ன பொண்ணு காணாம போயிடுது. அந்த ஊர்ல ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு சுத்துற 2 பேருதான் காரணம்னு அந்த ஸ்கூல்ல வேலை பாக்குற டீச்சர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்குறாங்க. எனவே, அதை கண்டுபிடிக்க போலீஸ் ஒருத்தர அனுப்புது.
அந்த ஸ்கூல்ல ஏற்கனவே வடிவேலு பிடி மாஸ்டரா இருக்க சுந்தர்.சியும் புது பிடி மாஸ்டரா வராறு. அந்த ஊர்ல் ரவுடிசம் நடக்குற பாத்து கோபப்படுறாரு. அதுக்கு அப்புறம் என்ன நடக்குது என்பதுதான் கதை. இந்த படத்தில் வடிவேலு என்னென்னவோ செய்யுறாரு. ஆனா சிரிப்புதான் வரல. ஏன்னா ஒரு சின்ன காமெடியை 200 சதவீதம் பெட்டரா கொடுத்து சிரிக்க வைப்பாரு வடிவேலு. ஆனால், இந்த படத்தில் அவருக்கு எனர்ஜியே இல்ல.
இந்த படத்தில காமெடி ஒர்க் அவுட் ஆகவும் இல்ல. சில இடத்துல மட்டும் ஆடியன்ஸ் சிரிக்குறாங்க. அந்த காமெடிய கூட வடிவேலு பெட்டரா பண்ணியிருக்கலாம். பல வருஷத்துக்கு அப்புறம் சுந்தர்.சியும், வடிவேலும் சேர்ந்திருக்காங்க.. காமெடி அள்ளும் என போனால் முடிஞ்சா சிரிங்கடா என சொல்வது போல முதல் பாதியும், முதல் பாதிக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என சொல்ற மாதிரி இரண்டாம் பாதியும் எடுத்து வச்சிருக்காங்க. வாழ்ந்து கெட்ட வடிவேலுவை பார்த்து வருத்தப்படுவதா என தெரியவில்லை’ என என கிண்டலடித்திருக்கிறார்.