சீமானுக்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் இதுதான்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..

Photo of author

By அசோக்

சீமானுக்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் இதுதான்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!..

அசோக்

seeman

நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த 15 வருடங்களாக அரசியல் செய்து வருபவர் சீமான். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்வார். பிரபாகரனின் தம்பி என தன்னை சொல்லிக்கொள்ளும் சீமான் தொடர்ந்து தனி ஈழம் பற்றி பேசி வருபவர். இலங்கை சென்று பிரபாரன் வீட்டில் ஆமைக்கறி சாப்பிட்டேன் என சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் இவர். அரசியல் மேடைகளில் ஆக்ரோஷமாக பேசுவது சீமானின் வழக்கம்.

சீமானின் பேச்சில் மயங்கி பல இளைஞர்கள் அவரின் ஆதரவாளர்களாக மாறினார்கள். திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என விரும்பும் சிலரும் சீமானை ஆதரித்து பேசி வருகிறார்கள். ஒருபக்கம், நடிகர் விஜயலட்சுமி இவர் மீது தொடர்ந்து பாலியல் புகார்களை சொல்லி வருகிறார். ஒருபக்கம், பெரியாரை பற்றி இழிவாக பேசி திமுக மற்றும் திக கழக தொண்டர்களின் கோபத்திற்கும் உள்ளானர்.

ஒருபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சீமான் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி விழாவில் அண்ணாமலையுடன் சேர்ந்து சீமானும் கலந்துகொண்டார். அதோடு, நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் சீமான் திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்கிற எண்ணம் பலருக்கும் உருவாகியிருக்கிறது. ஆனால், யாருடனும் கூட்டணி இல்லை என சீமான் சொல்லியிருக்கிறார்.

Seeman has said that he will not attend the anti-NEET rally
Seeman has said that he will not attend the anti-NEET rally

இந்நிலையில், பிரபல யுடியூப்பர் மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் எஸ்.ஆர்.எம் விழவில் சீமான் பேசிய வீடியோவை பகிர்ந்து ‘அண்ணாமலை மற்றும் மோடிக்கு பாராட்டு. கிறிஸ்தவ மதத்தை சீண்டுதல், ஆங்கிலத்தை மட்டம் தட்டுதல் என சீமான் நிரந்தர சங்கியாக மாறிவிட்டார். இதற்கு இவர் பயன்படுத்தும் முகமூடி தமிழ்ப்பற்று.. தொடர்ச்சியாக இளைஞர்களை மூளைச்சலவை செய்வதுதான் இவருக்கான அசைன்மென்ட். தற்போது கல்லூரி நிகழ்ச்சிகளில் தமிழ், தமிழ் என புல்லரித்து நாயனம் வாசித்து வருகிறார்.

RSS – பாஜகவின் பக்கவாத்தியமாக இவரும், இவருக்கு பக்க வாத்தியமாக அண்ணாமலையும் சோடி போட்டு வலம் வருகிறார்கள்.போலி தமிழ் மொழிப்பற்று, போலி தமிழர் இனப்பற்றுடன் இளைஞர்களை வசியம் செய்ய வரும் பூம்பூம் மாட்டுக்காரர்களை அண்டவிடாமல் தன்மான தமிழ் இளைய சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும். விரட்டி அடிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.