நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..

Photo of author

By அசோக்

நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..

அசோக்

vijay

ஆளும் கட்சியை விமர்சனம் செய்தால்தான் மக்களின் கவனத்தை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது சரிதான் என்றாலும் எல்லாவற்றுக்கு ஆளும் கட்சியை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கக் கூடாது. மத்திய அரசு தொடர்பான விஷயங்களில் அதையும் விமர்சிக்க வேண்டும். ஆனால் விஜயோ திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் வெளியிடும் எல்லா அறிக்கைகளும் திமுகவுக்கு எதிராக மட்டுமே இருக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால், திமுகவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. ஏனெனில், நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை திமுக அரசு கூட்டவுள்ளது. இதையடுத்து ‘இது ஏமாற்று வேலை’ என விமர்சனம் செய்திருக்கிறார். இந்நிலையில், சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்டமாறன் விஜயை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வழக்கில் வெற்றி.

அண்டை மாநிலமான கர்நாடகத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு. காவிரி தீர்ப்பில் வெற்றி.

சொந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வரின் சொத்து குவிப்பிற்கு எதிராக வழக்காடி.. சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி.

பேச்சுவாரத்தை, போராட்டம், சட்டசபை தீர்மானம் என அனைத்தையும் செய்து பார்த்தும் வழிக்கு வராவிட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடி சாதகமான தீர்ப்பை பெறுவது திராவிட கட்சிகளின் வரலாறு.

பிரச்னை செய்வது மத்திய அரசு, மாநில அரசு, பக்கத்து மாநில‌ அரசு என எதுவாக இருந்தாலும்.. இதுதான் ஜனநாயக நடைமுறை.

ஆனால் இந்த ஜனநாயகன் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, நீட் விலக்கு என அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால்.. போக மாட்டாராம். இவற்றை எதிர்த்து போராட்டம் செய்ய களத்திற்கும் போக மாட்டாராம். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க மாட்டாராம். ஊர்ப்பக்கம்.. திண்ணையில் அமர்ந்திருக்கும் பெருசு ‘நடுத்தெருவுல இருக்கற கல்லை தூக்கி ஓரமா போடுங்கப்பா. யாருக்காச்சும் அடி பட்டுற போகுது’ என பலநாட்களாக சொல்லுமே தவிர..‌ அந்த கல்லை.. அது தூக்கி போடாது. அப்படிப்பட்ட ஆள்தான் இவர்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.