கேங்கர்ஸ் தோல்வி!. பழைய பாணி அறுவை காமெடியை வடிவேலு நிறுத்தினா நல்லது!.

0
113
gangers

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய கிரி, வின்னர்,லண்டன், தலைநகர் மறுபக்கம் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். 15 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.

வழக்கமாக சுந்தர்.சி படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்துவிடும். அவர் கடைசியாக இயக்கிய 4 படங்களுமே வெற்றிதான். ஆனால், கேங்கர்ஸ் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை 5 கோடி வசூலை தாண்டவில்லை என்கிறார்கள். படத்திற்கு பெரிய மைனஸே வடிவேலுதான் என்கிறார்கள். படத்தின் முதல் பாதி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் எக்ஸ் தளத்தில் ‘இம்சை அரசன் படத்திற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் அட்டர் ஃப்ளாப். கேங்கர்ஸ் உட்பட. காமடியனாக நடித்த கத்திசண்டை, சந்திரமுகி 2 போன்றவையும் ஓடவில்லை. வெற்றிப்படங்களை தந்துவந்த சுந்தர் சி. காமடியில் எப்போதோ ஃபீல்ட் அவுட் ஆன வடிவேலுவை மீண்டும் நடிக்க வைத்து.. தனக்குத்தானே ஆப்பை சொருகிக்கொண்டார்.

கலர் கலராக கோமாளித்தனமான உடைகள் அணிவது, விதவிதமாக விக் வைப்பது, பழைய வசனங்களை ரெஃப்ரன்ஸ் வைத்து பேசுவது என மொக்கை போடாமல்.. தற்கால ரசிகர்கள் விரும்பும் காமடியை செய்தால் மட்டுமே வடிவேலு இனி காமெடியில் ஜெயிக்க முடியும். இல்லாவிட்டால் மாமன்னன் போல நல்ல கேரக்டர்களில் நடித்தால் இன்னொரு ரவுண்ட் வரலாம். தயவு செய்து இந்த பழையபாணி அறுவை காமடிகளை தவிர்க்கவும். தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் மிகவும் நொந்துபோய் இருக்கிறார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

Previous articleஒரு வருடத்திற்கு இலவச பேருந்து பயணம்!!போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!!
Next articleஜம்மு வழியாக தப்ப முயன்ற தீவிரவாதிகள்?!.. தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்!..