Breaking News

பெண்கள் பற்றி கேவலமாக பேசிய விஜய் மகளிர் வாழ்த்து சொல்லலாமா?! வீடியோ போட்டு திட்டிய பிரபலம்!…

tvk

TVK Vijay: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். மார்ச் 8ம் தேதியான இன்று மகளிர் தினம் என்பதால் விஜய் அவரே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேடைகளில் பேசுவது போல பேசாமல் அமைதியாக நிதானமாகவும் மிகவும் மெதுவாகவும் பேசியிருக்கிறார். அதில் ‘தமிழகத்தில் உள்ள என் தாய், மகள், தோழிகள் போல உள்ள எல்லா பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதேநேரம், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு மகளிர் தினம் எப்படி கொண்டாடுவது என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என நினைக்கவில்லை. மகளிருக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசுக்கு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம் என பேசியிருந்தார்.

இந்நிலையில், சிவகாசி படத்தில் ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும் என அசினுக்கு விஜய் பாடம் எடுக்கும் வீடியோவை ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘எவ்வளவு கொச்சையான வசனம்? இதை எழுதிய புரட்சி இயக்குனர் பேரரசு தற்போது பாஜகவில் இருக்கிறார். சினிமா மேடைகளில் கலாச்சார பாடம் எடுக்கிறார். பெண்கள் பற்றி இப்படி மிகக்கேவலமாக வசனம் பேசிய விஜய்.. இன்று அப்பாவி போல முகத்தை வைத்தபடி மகளிர்தின வாழ்த்து சொல்கிறார்’ என பதிவிட்டிருக்கிறார்.

சினிமாவில் நடிக்கும்போது ரஜினி கூட இது போன்ற வசனங்களை பேசியிருக்கிறார். படையப்பா படத்தில் கூட ‘பொம்பள பொம்பளையா இருக்கணும்’ என பிற்போக்கான வசனத்தை பேசியிருப்பார். பெரும்பாலும் சினிமாவில் இதில் எல்லா நடிகர்களும் பேசியிருக்கிறார்கள். ஆனால், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இது போன்ற வீடியோக்களெல்லாம் இப்போது வெளியாகியிருக்கிறது.