பேசுறது எப்படின்னு கத்துக்கிட்டு மைக் முன்னாடி வா!. சத்தியராஜ் மகளை விளாசிய மாறன்!..

0
6
divya
divya

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய் ஆகிவிட்டார். அதேநேரம் இன்னமும் அவர் தீவிர அரசியலில் இறங்கவில்லை. இப்போது நடித்து கொண்டிருக்கும் ஜனநாயகன் படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்.

விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வந்தார். விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக எல்லோராலும் வைக்கப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் விஜய்க்கு அன்று ஷூட்டிங் எதுவுமில்லை. அவர் வீட்டில்தான் இருந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துகொண்ட சத்ய்ராஜ மகள் திவ்யா விஜயை உதயநிதியோடு ஒப்பிட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது ‘உதயநிதி சாரை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அவர் ஒன்றும் ஏசி கேரவானிலும், தோழியோடு விமானத்திலும் செல்லும் அரசியல்வாதி இல்லை. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த மாமன்னன் அவர். அவரை எதிர்த்து யார் எங்கு நின்றாலும் டெபாசிட் போய்விடும். அவர் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு ஹீரோ’ என புகழந்து தள்ளியிருக்கிறார். திவ்யா சமீபத்தில் தன்னை திமுகவுடன் இணைத்துகொண்டவர்.

bluesatta

இந்நிலையில், பிரபல யுடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் ‘உங்களுக்கு மேடைப்பேச்சு சுத்தமாக வரவில்லை. அதை கற்றுக்கொண்டு மைக் முன்பு வாருங்கள். விஜய்யின் அரசியல் மீது விமர்சனம் வையுங்கள். அவர் யாருடன் விமானத்தில் சென்றார். யாருடைய கல்யாணத்திற்கு சென்றார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுவது எதற்கு?’ என பதிவிட்டிருக்கிறார்.

Previous articleஅண்ணாமலை பதவி விலக பாஜக மேலிடம் தான் காரணம்.. நயினார் சொன்ன உண்மை!!
Next articleஅதிமுக – வில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி இணைப்பு.. கொந்தளித்த முன்னாள் நிர்வாகி!!