தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கார்த்திக் சுப்பராஜின் நண்பர். எனவே, அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கினர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார்.
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் தான் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். இந்த படம் பாபி சிம்ஹாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். சில படங்களில் நடித்த ரேஷ்மி மேனனை காதல் திருமணமும் செய்து கொண்டார்.
ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்நிலையில்தான் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுனர் புஷ்பராஜ் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வரும்போது சென்னை கிண்டி கத்திபாராவில் இந்த விபத்து நடந்திருகிறது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஓட்டுனர் புஷப்ராஜை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பிரபல யுடியூபர் இர்பான் ஓட்டி வந்த கார் ஒருமுறை விபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். முதலில் காரை ஓட்டியது இர்பான் என செய்தி வெளியானது. அதன்பின் இர்பான் காரில் இல்லை. அவரின் கார் ஓட்டுனர்தான் விபத்தை ஏற்படுத்தினார் என சொன்னார்கள். இப்போது பாபி சிம்ஹா விஷயத்திலும் இதுதான் நடந்ததா என போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.