மகளின் 25வது பர்த்டே, 2வது மனைவி பிரக்னன்ட்!! பிரபல நடிகருக்கு கிடைத்த டபுள் சந்தோசமாம்!!

0
139

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு இன்று டபுள் சந்தோசத்தை  கொண்டாடியுள்ளார். அது என்னவென்றால் மூத்த மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

இதே நாளில் சைஃப் அலி கானின் 2வது மனையும் பிரபல நடிகையுமான கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கும் செய்தியும்  தெரியவந்துள்ளது.

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கும் அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கும் மகளாக பிறந்த பாலிவுட்டின் இளம் நடிகை சாரா அலி கான் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சைஃப் அலி கானின் மூத்த மகள் சாரா அலி கான் சுஷாந்த் சிங்கின் “கேதார்நாத்” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.  

பாலிவுட் பிரபல முன்னணி நடிகையான கரீனா கபூர்,2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். 40 வயதாகும் கரீனா கபூர், தற்போது  இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். ஏற்கனவே இவர்களுக்கு தைமூர் எனும் மூன்று வயது மகன் உள்ளது.

நடிகை கரீனா கபூர், கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்த பாலிவுட் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

Previous articleஉலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பட்டியலில் 6வது இடம் பிடித்த முதல் இந்திய நடிகரின் சம்பளம்
Next articleகாவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!