” யாரையும் நம்பாதீங்க”.. 10 நிமிஷம்.. மூச்சே விடாமல் பேசி விட்டு.. தற்கொலை செய்துகொண்ட நடிகை!

Photo of author

By Parthipan K

பாலிவுட்டில் சீரியல்  நடிகையான அனுபமா, ஃபேஸ்புக்கில் லைவாக வந்து 10 நிமிடம் மூச்சு விடாமல் பேசிவிட்டு அதன்பின் கிச்சனுக்கு போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோவில் அவர் பதிவிட்டதாவது:“வாழ்க்கையில் எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு.. தற்கொலை செய்துக்கணும்போல இருக்கு என்று யார்கிட்டயாவது சொன்னால், அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் அல்லது தோழியாக இருந்தாலும் சரி உங்களை அவங்ககிட்ட இருந்து தள்ளியிருக்க தான் சொல்வாங்க…. ஏன்னா, நீங்கள் செத்து போய்ட்டால், அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல என்றும்,

இது மட்டுமல்லாமல் அவருக்கு நடந்த மற்றொரு அவமானத்தையும்  கூறியதாவது: அதுமட்டுமல்ல, உங்களை கிண்டல் செய்வாங்க.. இன்னொருத்தர் முன்னாடி அவமானப்படுத்துவாங்க.. அதனால தயவு செய்து நீங்க யாருமே உங்க பிரச்சனைகள் பற்றி யார்கிட்டயும் பேசாதீங்க.. முக்கியமா யாரையுமே நண்பரா நினைக்காதீங்க. ஆனால் அவர்கள் நம்பும் நபராக நீங்க இருங்க… ஆனா யாரையும் நம்ப வேணாம்.. இது தான் என் வாழ்க்கையில் நான் கற்றுகொண்ட பாடம்.

அதன்பின்  நடுராத்திரி 12 மணி.. குட்பை, குட்நைட் என்று சொல்லிவிட்டு போனவர், அப்படியே கிச்சனுக்கு போய் தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.. ஆனால் உடனே விஷயம் வெளியே வரவில்லை. 2 நாள் கழித்துதான் இவர் இறந்ததே தெரியவந்துள்ளது.

மேலும் அவர் வீட்டில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார். அதில் பணப்பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். மனிஷ் ஜா என்பவர் இவரது டூவீலரை எடுத்து கொண்டு போய்விட்டாராம்.. அதையும் சொல்லி அந்த லெட்டரில் சொல்லி உள்ளார்.

பாலிவுட்டில் பிரபலங்கள் வரிசையாக தற்கொலை செய்து கொள்வது பலரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.