திரௌபதி படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பாலிவுட் பிரபலம் : இன்ப அதிர்ச்சியில் படக்குழுவினர்

0
165

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக திரௌபதி பட டீசர் வெளியான நாளில் இருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது திரைத்துறையில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் உற்று பார்க்க வைத்துள்ளது.

அதன் பிறகு பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளை கடந்து தணிக்கை முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதிலும் சர்ச்சை இல்லாமல் இல்லை, இரண்டு முறை தணிக்கை செய்யப்பட்ட பிறகே ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ரிலீஸ் ஆன திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியால் படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் படக்குழுவினரை மேலும் குஷிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. பாலிவுட் பிரபலமான விவேக் ஓபராய் பார்க்க ஆவலாய் உள்ளார் என்பதே அந்த தகவல்.

தமிழ் சினிமா வினியோகஸ்தர் கோபி என்பவர் விவேக் ஓபராய் பார்க்க ஆவலுடன் இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி திரௌபதி படக்குழு மற்றும் அதன் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleபேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்
Next articleவக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !