பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!!

Photo of author

By Sakthi

பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!!

Sakthi

Updated on:

Bomb explosion near the Golden Temple!! Police arrested 5 people!!
பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!!
நேற்று நள்ளிரவு பொற்கோயில் அருகே குண்டு வெடித்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்திள் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே மாதம் 6ம் தேதியும், 8ம் தேதிதியும் குண்டு வெடித்தது இதையடுத்து நேற்று நள்ளிரவும் மீண்டும் குண்டு வெடித்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.15 முதல் 12.30 மணிக்குள் அமிர்தசரஸ் பகுதி பலத்த சத்தத்தினால் குலுங்கியது. இதையடுத்து அந்த பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.