அரசு ஊழியர்களுக்கு போனஸ்:! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

0
163

அரசு ஊழியர்களுக்கு போனஸ்:! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

ரயில்வே துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது ரயில்வே காவல் படை தவிர்த்து,அரசிதழ் பதிவு பெறா நிலையிலான துறை ஊழியர்களுக்கு,போனஸ் வழங்குவதாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.78 நாட்களுக்கான சம்பள தொகையை போனஸாக வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகைக்கு முன்பாக இந்த தொகை வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 11.2 லட்சம் ஊழியர்கள் பயன்ப்படுவர் என்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த வருடம் அக்டோபர் ஐந்தாம் தேதி தசரா பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது.

Previous articleஅத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் கண்காணிப்பு- மத்திய அரசு அறிக்கை! 
Next articleஉயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி!