இவர்களுக்கு போனஸ் உயர்வு! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
189
Bonus hike for them! Important information released by Chief Minister Mukha Stalin!
Bonus hike for them! Important information released by Chief Minister Mukha Stalin!

இவர்களுக்கு போனஸ் உயர்வு! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கோவில்களில் மேம்பாடு, கோவில்களின் சொத்துகளை பாதுகாத்தல்,பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கவனித்து நிறைவேற்றி தருதல் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகின்றது.அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியார்கள்,இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு ரூ 1000 ஓய்வுதியமாக வழங்கப்பட்டு வந்தது.

அந்த ஓய்வூதியமானது தற்போது ரூ 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து கிராமக் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு ரூ 3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.அவை தற்போது ரூ 4000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் செலுத்தி வருகின்றனர் அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் பணி புரிபவர்களுக்கு மாதம் ரூ 5000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு இரண்டு ஜோடி புத்தாடை வழங்கப்படும் என அறிவிக்கப்படும்.

அரசு பணியாளர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் கோவில்களில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 34 சதவீதத்தில் இருந்த அகவிலை படியானது 38 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம் 10 ஆயிரம் கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 7 கோடி கூடுதல் செலவு என்பது குறிப்பிடக்கது.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதை போல அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் முழுநேர, பகுதிநேர, தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ரூ 2000  வழங்கப்பட்டு வந்த போனஸ் இந்த ஆண்டின் ரூ 3000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleBreaking: துணிவு படத்தின் மாஸ் டயலாக்!! போர்க்கொடி தூக்கும் பாஜக!!
Next articleசேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!