அடி பம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்:! காவல்துறையினர் அதிர்ச்சி!!

0
90

அடி பம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்:! காவல்துறையினர் அதிர்ச்சி!!

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராய விற்பனை கும்பலை பிடிக்கும் வேட்டையில் காவல்துறையினர் அதிரடியாக இறங்கியுள்ளனர்.இந்த வேட்டையில் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் கள்ள மதுபானங்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு விரைந்து இரண்டு கிராமங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமாக இருந்த கையடி பம்பினை பார்த்துள்ளனர்.சந்தேகத்தின் அடிப்படையில் அந்த கையடி பம்பை அழுத்தியபோது தண்ணீருக்கு பதில் மதுபானம் வந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.நிலத்தில் சுமார் 7 அடி ஆழத்தில் சட்டவிரோதமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த டிரம்பிலிருந்து அடிபம்மூலம் மதுபானம் வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இரண்டு கிராமங்களிலிருந்து இந்த சோதனையின் போது சுமார் 1200 லிட்டர் கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டிரம்பிலிருந்து கைப்பற்றப்பட்ட 400 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் இதுவரை சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்றதாக 26000 பேரை,கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Pavithra