அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு!

அண்ணன், தம்பி இருவரும் செய்த கலட்டா! சிறையில்  அடைப்பு!

ஓமலூரை அடுத்த கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன்கள் சிவமுருகன் (வயது 22), மாயக்கண்ணன் (வயது 25) என இருமகன் உள்ளனர். மேலும் அவர்கள், இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைதொடர்ந்து  மாணவியின் தாயார்  காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.  அந்த புகாரின்பேரில் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி அண்ணன்- தம்பி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த சிவமுருகன், மாயக்கண்ணன் இருவரையும் 4 மாதங்களுக்கு பிறகு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Leave a Comment