ADMK: ராமேஸ்வரம் பாம்பன் பலமானது கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது 545 கோடியில் மீண்டும் புதுப்பித்துள்ளனர். இதனை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம், முடித்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பாலம் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி வரும் 6 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவரை சந்திக்க ஆளும் கட்சி எனத் தொடங்கி பலரும் கடிதம் கொடுத்துள்ளனர். முதலில் தன் கட்சியை சேர்ந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
இவர்களின் லிஸ்ட் அவுடானது இன்று டெல்லி வெளியிடும் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து ஆளும் கட்சியான ஸ்டாலின் தொகுதி வரையறை குறித்து பேசுவதற்காக சந்திக்க வேண்டுமென கடிதம் எழுதி உள்ளார். இந்த வரிசையில் தோழமை கட்சியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மோடியை சந்திக்க வேண்டுமென கேட்டுள்ளனர். மேற்கொண்டு தினகரன், சசிகலா ஆகியோரும் இவர்களைப் போன்று மோடியுடன் சந்திக்க எங்களுக்கும் நேரம் ஒதுக்கங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக பாஜக கூட்டணியுடன் அதிமுக இணையப் போவதால் எடப்பாடிக்கு மோடியை சந்திக்கும் அனுமதி கிடைத்துவிட்டதாம், கூடுதலாக ஓபிஎஸ் -சும் சந்திக்க வரலாம் என்ற உத்தரவு மேலிடத்திலிருந்து வந்துவிட்டது. இவர்கள் இருவரையும் சந்தித்து மீண்டும் அதிமுக கட்சி ஒருசேர பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளது. அதேபோல மோடி வரும் அந்நாளில் கூட அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்து விட்டதை அறிவிக்கலாம் எனக் கூறுகின்றனர். இதன் நடுவே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் மோடியை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.