நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!!

0
551
Both of you go to Delhi.. Seats for 2 in Central Cabinet!! An old face as Tamil Nadu leader!!
Both of you go to Delhi.. Seats for 2 in Central Cabinet!! An old face as Tamil Nadu leader!!

நீங்க இருவரும் டெல்லிக்கு வாங்க.. மத்திய அமைச்சரவையில் 2 வருக்கு சீட்!! தமிழக தலைவராக பழைய முகம்!!

நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார்.இவர் பதவியேற்ற பிறகு பல மாற்றங்கள் கட்சியினுள் நடக்க உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக குஜராத் தமிழகம் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக-வால் ஒரு சீட் கூட இடம்பெற முடியவில்லை.இதற்கு முக்கிய காரணம் அம் மாநில தலைவர்கள் என்று கூறுகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் ஒரு எம்பி கூட இடம்பெற முடியாமல் போனதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இவரை மாற்றும் படியும் மேல் இடத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இவரை ராஜ்யசபா வழியாக மத்திய மந்திரியாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியானது.இவரை மத்திய மந்திரியாக மாற்றிவிட்டால் இவரது இடத்திற்கு மீண்டும் பழைய தலைவர்களான தமிழிசை அல்லது கேசவ விநாயகம் பாரதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெறலாம் என்ற பெரிய வரிசையே உள்ளது.அந்த வகையில் தற்பொழுது மத்திய அமைச்சரவையில் இரண்டு பேருக்கு இடம் ஒதுக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் எல் முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கு தமிழிசை வானதி சீனிவாசன் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் உள்ளதாகவும் இதில் யார் பதவியேற்பார் என்பது மேலிடம்தான் தேர்வு செய்யும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.