ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவர் மீது பரபரப்பு புகார்!! தல மற்றும் தளபதியால் எழுந்த புதிய சர்ச்சை!!
மேல்பட்ட நீதித்துறை முழுவதும் ஊழல் தான் என கூறியதில் நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்தது. மேற்கொண்டு அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் முன்ஜாமீன் மூலம் கடந்த மாதம் சவுக்கு சங்கர் வெளியே வந்தார்.
அவ்வபோது பல சர்ச்சையை கிளப்பும் விதத்தில் யூடியூப் சேனலில் பேட்டியளித்தும் வருவார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் என்னிடம் தான் அனைத்து தகவல்களையும் கேட்பார்கள் தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து விட்டார்கள் என்ற வகையிலும் பேட்டி அளித்து சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவ்வாறு கூறியவர் தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியதாவது, ஸ்டாலினின் பினாமி நிறுவனம் தான் உதயநிதி நடத்திவரும் ரெட் ஜெயன்ட் எனவும், இவர்கள் லாபம் ஈட்டுவதற்காக அதிகாலை ரத்து செய்யப்பட்ட அஜித் மற்றும் விஜயின் காட்சிகள் அனைத்தும் திரையிடப்பட்டது எனக் கூறி புகார் அளித்துள்ளார்.
ஒரு தலை பட்சமாக தனது சொந்த லாபத்திற்காக மட்டும் ஸ்டாலின் இவ்வாறு அனுமதி அளித்துள்ளதாக கூறியுள்ளார். இவ்வாறு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின், அவருக்கு சாதகமாக சட்டத்தை வரையறுத்துக் கொள்கிறார். எனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மேற்கொண்டு இது குறித்து நான் நீதிமன்றம் நாட உள்ளேன் எனவும் கூறினார்.
மேற்கொண்டு இந்த விதிமீறல் குறித்து ஆளுநரை கூட சந்திக்க உள்ளேன்.ஆனால் தற்பொழுது அவர் டெல்லி சென்றுள்ளார் என கூறினார்.அவர் டெல்லி சென்றதே இவர்களை பற்றி புகார் அளிக்கத்தான்.ஏனென்றால் இவருக்கே தெரியாமல் ஆளுநர் மாளிகையில் இவரை கண்காணிக்க ஊழியர்கள் உள்ளதாகவும் அதுவே இவருக்கு இப்பொழுது தான் தெரியவந்துள்ளதால் இதுபற்றி தெரிவிப்பதற்காக டெல்லி சென்றுள்ளதாக கூறினார்.