State

கேம் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!

ஊரடங்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் போனதால் வீட்டிலிருக்கும் முழுநேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தன் பெற்றோர் கண்டித்த காரணத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு 12 வயதில் இராமகிருஷ்ணன் என்னும் மகன் ஒருவர் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு செல்போனில் கேம் விளையாடுவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. மேலும், இதனை இவர் வழக்கமாகவே கொண்டுள்ளார்.

தற்போது கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. ஆதலால், பள்ளிகள் எதுவும் திறக்கப்படாத நிலையில் இச்சிறுவனும் வீட்டிலேயே முடங்கியுள்ளார். வீட்டிலேயே இருப்பதால் இவருக்கு செல்போனில் கேம் விளையாடுவதற்கு நேரமும் வெகுவாக கிடைத்துள்ளது. பெற்றோர்கள் கண்டித்தும் அதனை அச்சிறுவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதுபோல் செல்போனிற்கும் கேமிருக்கும் அடிமையான அச்சிறுவன் நேற்று மாலை வெகுநேரமாக செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனைப் பார்த்த அச்சிறுவனின் பெற்றோர்கள் அவனை கண்டித்து, அத்தோடு அவனிடமிருந்து செல்போனையும் வாங்கிக் கொண்டனர்.

இதனால் மனமுடைந்த அச்சிறுவன் இரவு தூங்க சென்றபோது, தன் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனைப் பார்த்த அவனின் பெற்றோர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது உள்ள நிலையில் பெரும்பாலான சிறுவர்கள் செல்போனிருக்கும் கேமிருக்கும் அடிமையாகியுள்ளனர். எனவே, பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை கவனத்தோடு பார்த்துக்கொள்வது நல்லது.

மேலும், அவர்களுக்கு செல்போன் கொடுப்பதற்கு பதிலாக கல்வி, நற்பண்புகள், நம் நாட்டின் வரலாறு, விவசாயம், போன்றவற்றை கற்றுக்கொடுப்பது சிறந்தது என மனநல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment