ரயில் டிராக்கில் விழுந்த பையன்! காப்பாற்றத் துடித்த கண் தெரியாத அம்மா! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ!

Photo of author

By Mithra

ரயில் டிராக்கில் விழுந்த பையன்! காப்பாற்றத் துடித்த கண் தெரியாத அம்மா! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ!

மும்பை அருகே வாங்கனி தொடர்வண்டி நிலையத்தில் கண் தெரியாத பெண் ஒருவர் தன்னுடைய பையனுடன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது பையன் ரயில் டிராக்கில் விழுந்ததால், செய்வதறியாது தவித்த அந்த தாய், கைகளால் தடவி தேட ஆரம்பித்தார்.

அப்போது, அந்த டிராக்கில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததால், மேலே ஏற முடியாமல் சிறுவன் கதறினான். சிறுவன் இருக்கும் இடம் தெரியாததால் தரையை தடவிக்கொண்டே தாய் கத்தி கூச்சலிட்டார்.

இதைப் பார்த்த, மயூர் ஷால்கே என்ற ரயில்வே ஊழியர் வேகமாக டிராக்கில் ஓடிச் சென்று, ரயில் மோதவுள்ள நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை மேலே தூக்கி விட்டார். மேலும், லாவகமாக அவரும் மேலே ஏறும் போது, ரயில் அவர்களை கடந்து சென்றது.

நொடிப்பொழுதில் நடந்த இந்த நிகழ்வு, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை சென்ட்ரல் ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மயூர் ஷால்கேவை பாராட்டியுள்ளது. மேலும், மயூர் ஷால்கேவை அழைத்து சென்ட்ரல் ரயில்வே அதிகாரிகள் பாராட்டினார்கள்.

உயரை பணயம் வைத்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய மயூர் ஷால்கேவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். மேலும், விலை மதிக்க முடியாத அவரின் தைரியமான செயலுக்கு, உரிய வெகுமதி கிடைக்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.