காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை உண்மையாக்கி காட்டிய இளைஞர்!

0
66

தற்போதுள்ள சூழ்நிலையில், திருமணம் செய்ய வேண்டுமென்றால் ஒருவருக்கு பெண் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. அந்தளவிற்கு நாட்டில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் என்ன என்று பொறுமையாக யோசித்துப் பார்த்தால் நம்முடைய முன்னோர்கள் செய்த மிகப் பெரிய தவறு புலப்படும் அதாவது ஒரு காலத்தில் பெண் குழந்தைகளை வேண்டாம் என பெண் சிசுக்கொலை கொலை செய்த காரணத்தால்தான் தற்போது திருமண வயதில் இருக்கும் இளைஞர்கள் பெண் கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள்.

அதாவது நம்முடைய தந்தை காலத்தில் ஒரு வீட்டிற்கு 5,6 பெண்கள் இருந்தார்கள் ஆகவே அப்போது இருந்தவர்கள் ஒரு திருமணத்திற்கு இரண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்களின் காலத்தில் அவர்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டியதில்லை என்ற அளவிற்கு பொருளாதாரரீதியாக நம்முடைய முன்னோர்கள் அனைத்தையும் சேர்த்து வைத்து விட்டு சென்றனர்.

அதன் காரணமாக, 2 அல்லது 3 திருமணங்கள் செய்து கொண்டு 80களில் வாழ்ந்தவர்கள் வாழ்ந்து முடித்து விட்டார்கள்.

ஆனால் தற்போது இருக்கின்ற இளைஞர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது அனைவரும் திருமண வயது வந்து விட்டால் பெண் கிடைத்தால் போதும் என நினைத்து படாதபாடுபடுகிறார்கள்.

இந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலம் லோகர்டகா அருகே பண்டா என்ற கிராமத்தில் வசித்து வரும் சந்திப் ஓராவன் என்பவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வந்தார். அவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது, மேற்குவங்கத்திலுள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர் சந்திப் வேலைக்கு சென்றார் என சொல்லப்படுகிறது. அங்கு சுவாதி குமாரி என்பவரும் வேலைக்காக வந்திருந்தார்.

அந்த சமயத்தில் இருவருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய பின்னரும் கூட அவர்களுடைய சந்திப்பு தொடர்ந்தது. அவர்களுடைய இந்த காதல் அவர்களின் குடும்பத்தினருக்கும், கிராமத்தினருக்கும், தெரியவந்துவிட்டது.

இவரைத் தொடர்ந்து கிராமத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது இதில் 2 பெண்களையும் அவர் மனம் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு அந்த 2 பெண்களோ அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக, 3 பேரின் ஒப்புதலுடன் நடைமுறையில் இல்லாத இந்த திருமணம் பண்டா கிராமத்தில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சந்திப் தெரிவித்ததாவது, 2 பெண்களை ஒன்றாக திருமணம் செய்ததில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் 2 பேரையும் நான் காதலிக்கிறேன் அவர்கள் இருவரில் ஒருவரை கூட என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.