அக்னிபத் திட்டம் மக்களை தூண்டி விடுவது யார்? அதிரடியில் இறங்கிய மத்திய அரசு!

0
58

இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் தொடர்வண்டிகளுக்கு தீவைப்பு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

17 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் 4 ஆண்டுகாலம் ஒப்பந்தத்தினடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றலாம். அதன்பிறகு அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படும், அதன் பின்னர் அவர்கள் அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிக்கலாம்.

இதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதை அரசியல் ரீதியாக பார்த்தால் எதிர்க்கட்சியினர் ஏதோ ஒரு அரசியல் லாபத்திற்காக இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன என்பது கண்கூடாக தெரிகிறது.

ஆனாலும் இதை ஒரு சாதாரண குடிமகன் என்ற இடத்திலிருந்து பார்க்கும்போது தற்போதுள்ள இளைஞர்கள் வேலைக்கு கூட செல்லாமல் இணையதள விளையாட்டுகளில் மூழ்கி வருகிறார்கள்.

அதன் காரணமாக, அவர்களுடைய யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து வருகிறது, அதோடு பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வேலைக்கு செல்லாமல் இருப்பதால் அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையும் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதெல்லாம் யோசித்து பார்த்தால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திட்டம் அற்புதமான திட்டமாகத் தான் தெரிகிறது. ஆனால் அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சியினர் இதனை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை தமிழக அரசை உஷார் படுத்தி இருக்கிறது.

தற்போது பள்ளி மற்றும் கலவரங்களின் செயல்படத் தொடங்கும் சூழ்நிலையில், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் அமைப்பின் தலைவர்களை மாநில உளவுத்துறை கியூ பிரிவு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அதோடு தமிழக காவல் துறையில் விடுப்பில் சென்றவர்களை உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று நேற்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி,கல்லூரி வாசல்களில் மப்டியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக உளவுத்துறை துணை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கும்போது மத்திய உளவுத்துறை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்ற அமைப்புகளின் நிர்வாகிகளை கண்காணித்து வருகிறோம் தேவைப்பட்டால் கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.