காதலன் போட்ட கண்டிஷன், பதறிப்போன காதலி!- இப்படியும் விதிகளா?

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தன காதலன் இட்ட கண்டிசன்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பொதுவாகவே காதலர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகளும் சச்சரவுகளும் வந்து போவது உண்டு. அது போன்று ஒவ்வொரு காதலர்களுக்கு அவர்களுக்குள்ளான தனித்துவமான சட்ட திட்டங்களும் உண்டு. நீ இதை செய்ய வேண்டும், இதை செய்ய கூடாது என விதிகள் இருக்கும்.

பொசெசிவ் என்ற பெயரில் ஒரு பெரிய போர்க்களம் வெடிக்கும். ஆனால் அத்தனையின் முடிவிலும் கூடல் என்ற உண்மைக்காதல் வெளி வரும்.

இது எல்லாம் ஒரு எல்லையை மீறி போகும் போது அது ஆபத்தானதாக மாறுகிறது. இருவரில் ஒருவர் அதிகமாக டாமினன்ட் செய்யும் பொழுது, பிடிக்காத அவதூறு வார்த்தைகளை உபயோகிக்கும் போது , மனரீதியான தாக்குதல், உடல் ரீதியான தாக்குதல்கள் நடக்கும் போது இந்த அழகிய உறவானது toxic relationship ஆக மாறுகிறது.

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தன காதலன் தனக்கு விதித்த கண்டிஷன் பற்றியும் அதனால் அவர்களது காதல் பிரிவில் முடிந்து விட்டது பற்றியும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு அவருடைய காதலன் போட்ட 11 கண்டிஷன்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த கரோலின் என்ற பெண் ஒருவர் தான் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு படிக்க செல்வதாக கூறியுள்ளார், அதற்கு அவருடைய காதலன் அங்கு சென்று படிக்க வேண்டும் என்றால் இதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என 11 கண்டிசன்களை எழுதி அனுப்பியுள்ளார்.

அவரது கண்டிஷன் படி, கரோலின் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்றால், அவர் மது அருந்த கூடாது, பார்ட்டிகளுக்கு செல்ல கூடாது, மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது, ஆண் நண்பரிடம் 25 அடி தூரம் தள்ளி நின்றே பேச வேண்டும், ஸ்போர்ட்ஸ்க்கு பயன்படுத்தப்படும் உள்ளாடைகளை அணியக்கூடாது, மேலும் இரவு 9 மணிக்கு மேல் அவர் தனியாக தான் உள்ளார் என்பதை வீடியோ கால் மூலம் உறுதி செய்ய வேண்டும், மேலும் தான் கொடுத்த மோதிரத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் கழற்ற கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார்.

இதனை படித்த கரோலின், இது போன்ற கண்டிஷன்கள் ஒரு பெண்ணை சுதந்திரமாக இயங்க விடமால் தடுப்பதாகவும் மேலும் இது காதலே இல்லை வன்முறைக்கு சமமானது எனவும், இந்த உறவிலிருந்து வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.

காதலர்களே உங்களது உறவில், பொசெசிவ் அழகானது ஆனால் ஒருவரை நம்பாமல் அவர்களை சந்தேகப்படுவது, சந்தேகத்தின் பேரில் காயப்படுத்துவது இதெல்லாம் சற்றும் சரியானதா என்று யோசித்து பாருங்கள்.

இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள், இல்லையேல் அழகான உணர்வை இழக்க நேரிடும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment