காதலனின் தந்தை மிரட்டல்! அவமானத்தால் தீக்குளித்து பலியான காதலி

Photo of author

By Parthipan K

ஆரணியில், காதலனின் தந்தை மிரட்டியதால் அந்தப்பெண் அவமானம் தாங்க முடியாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகள் வெண்ணிலா (வயது 19). இவர் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவரின் மகன் தான் பிரசாந்த் (வயது 24). வெண்ணிலாவும், பிரசாந்தும் கடந்த ஓராண்டிற்க்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இதனை தெரிந்துகொண்ட நாகராஜ், ஆத்திரமடைந்து கடந்த 21ஆம் தேதி அன்று, வெண்ணிலாவின் வீட்டிற்க்கு சென்று ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வெண்ணிலாவின் பெற்றோர், ஆரணி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காவல்துறையினர், இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தன் காதலனின் தந்தை நாகராஜ் ஆபாசமாக பேசியதில், வெண்ணிலா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். படுகாயமடைந்த அவரை மீட்டு உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.