இதனால் சிறுவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி வழக்கறிஞர் பிரஷ்னேவ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவில் அவர் கூறியதாவது, 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் சான்றிதழ் அளிக்கப்பட்ட படங்களை பார்க்க கூடாது என்று மத்திய தணிக்கை வாரியம் தெரிவித்துள்ள போதும் இதனை எந்த ஒரு திரையரங்கும் முறையாக கடைப்பிடிப்பதில்லை.
எனவே மத்திய தணிக்கை வாரியம் எச்சரிக்கையை மீறி சிறுவர்களை ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட படங்களை பார்க்க அனுமதிப்பது சட்டப்படி குற்றம். இனி வரும் நாட்களிலாவது திரையரங்குகள் மற்றும் திரைப்பட விநியோகிப்பாளர் என அனைவரும் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு மனு அளித்துள்ள நிலையில் அதனை உடனடியாக பரிசீலனை செய்து திரைப்பட விநியோகிஸ்தர்கள் மற்றும் பட தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் இது குறித்து உத்தரவிட வேண்டும்.
மேலும் இந்த வழக்கானது நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்த நிலையில், மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஆஜரான நிலையில், 7 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமியர்கள் கார்ட்டூன் படங்களை பார்க்க அனுமதிக்க கூடாது என்று விதிமுறைகள் உள்ள நிலையில், இதனை தற்பொழுது அவர்களது வீடுகளிலேயே பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்றவாறு வாதிட்டார்.
அரசு சார்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர் முத்துக்குமார், இதுகுறித்து எப்படிப்பட்ட புகார்கள் வந்தாலும் அரசு அதனைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று இவருக்கு எதிராக வாதிட்டதோடு, குழந்தைகள் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலன் குறித்து தமிழக அரசுக்கு அதிக அக்கறை உள்ளது என்றும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ஏ சான்று மட்டுமல்ல எந்த ஒரு படம் திரையரங்கில் வந்தாலும் அடுத்த மூன்று மாதங்களிலேயே தொலைக்காட்சிகளில் திரையிட தான் செய்கின்றனர். அதற்காக ஏ சான்று உள்ள திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பது சட்டப்படி குற்றம்.
எனவே இது குறித்து அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியமும் உடனடியாக பரிசீலனை செய்து ஏ சான்றுடன் வெளிவரும் படங்களை சிறுவர்கள் பார்ப்பதை தடுக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.