ஆண் குழந்தைகளுக்கு ரூ.5,00,000 கிடைக்கும்.. இந்த திட்டத்திற்கு உடனே அப்ளை செய்யுங்க!!
போஸ்ட் ஆபிஸ் செயல்படுத்தி வரும் சேமிப்பு திட்டங்களால் ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.போஸ்ட் ஆபிஸில் கடன் உதவி,முதலீட்டிற்கான அதிக வட்டி,வருமான வரி விலக்கு திட்டங்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உள்ளதால் பெரும்பாலானோர் அதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
பெண் குழந்தைகளின் நலனிற்காக “செல்வமகள் சேமிப்பு” என்ற பெயரில் 8.2% வட்டி வழங்கக் கூடிய சிறப்பான திட்டம் நடைமுறையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்தே ஒன்றே.ஆனால் ஆண் குழந்தைகளுக்கு என்று பொன் மகன் சேமிப்பு என்ற பெயரில் திட்டம் உள்ளது தகவல் பலருக்கும் தெரிவதில்லை.கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயது நிரம்பிய ஒரு ஆண் குழந்தைக்கு தனி கணக்கு தொடங்கி முதலீடு செய்ய முடியும்.
10 வயதிற்கு குறைவான ஆண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவளர் உதவியுடன் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.ரூ.5,00 செலுத்தி இத்திட்டத்திற்கான பாஸ்புக்கை பெற்றுக் கொள்ளலாம்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கான முதலீட்டு தொகை விவரம்:
இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச வருடாந்திர வைப்பு தொகை ரூ.500 ஆகும்.அதேபோல் அதிகப்பட்ச வருடாந்திர வைப்பு தொகை ரூ.1.5 லட்சமாகும்.15 ஆண்டுகள் முதலீடு செய்ய கூடிய இந்த திட்டத்திற்கு தற்பொழுது 7.6% வட்டி வழங்கப்படுகிறது.ஆண் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பிய உடன் முதலீட்டு தொகை + வட்டி தொகை வழங்கப்படும்.
ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்,பான் அட்டை,ஆதார் அட்டை,புகைப்படம்,முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து போஸ்ட் ஆபிஸில் சமர்ப்பித்து கணக்கு தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் நீங்கள் தங்கள் குழந்தை பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 அல்லது வருடத்திற்கு ரூ.12,000 செலுத்தி வருகிறீர்கள் என்றால் 15 வருட முடிவில் 1.83 லட்சம் முதிர்வு தொகை பெற முடியும்.