பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!! கர்நாடக முதலமைச்சர் காவல் துறைக்கு உத்தரவு!! 

Photo of author

By Sakthi

பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!! கர்நாடக முதலமைச்சர் காவல் துறைக்கு உத்தரவு!!
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் தேவகௌவுடா அவர்களின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி சார்பாக ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா அவர்களின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அவரை தேடப்படும் நபராக அறிவித்து என்று அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் இது குறித்து “பாஜக கட்சி சார்பாக ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளியான பிரஜ்வல் ரேவண்ணா அவர்களை மத்திய அரசு பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றது. பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் சரி. அவரை கைது செய்யாமல் விட மாட்டோம். அவரை கைது செய்து இந்தியா அழைத்து வருவோம். பிரஜ்வல் ரேவண்ணா அவர்கள் இந்தியா வந்தே ஆக வேண்டும்.
பிரஜ்வல் ரேவண்ணா அவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு இருப்பது தெரிந்தும் கூட பாஜக கட்சியானது ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பிரஜ்வல் ரேவண்ணா எங்கு இருந்தாலும் கைது செய்து இந்தியா அழைத்து வந்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.