பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு!

Photo of author

By CineDesk

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு!

பிரேசில் அதிபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ என்பவர் தனது குளியல் அறைக்குச் சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டார். இதனால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் 10 மணி நேரம் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தாலும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகள் மறந்து விட்டதாகவும் பின்னந்தலையில் அடி பட்டதால் தான் இந்த பிரச்சனை அவருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவரது நினைவுகள் மீட்கப்பட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியான சிகிச்சையின் காரணமாக அவர் தற்போது முழு குணம் அடைந்து விட்டதாகவும், அவருக்கு தற்போது அனைத்து நினைவுகளும் திரும்ப வந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அதிபர் ஜெயீர் போல்சனரோவும் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கடவுளுக்கும் நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது பிரேசில் அதிபர் முழு அளவில் குணம் ஆகிவிட்டதால் மீண்டும் அதிபர் பணியை கவனிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.