அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

Photo of author

By Pavithra

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,பணம் ஏதாவது இருக்குமா என்று தேடியுள்ளனர்.

கடையில் பணம் இல்லாததனால்,ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்நிலையில் காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அரசு மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக இந்த தகவலை வாலாஜாபாத் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில் அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திருட்டு குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.ஏற்கனவே இந்த கடையில் இரண்டு முறை கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது என்பதும் தற்போது குறிப்பிடத்தக்கது.