Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி!

Photo of author

By Rupa

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி!

Rupa

Breaking: The ruling party is trapped! Deputy Chief Minister arrested! The main point in the net of corruption!

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி!

தற்பொழுது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரவால் மற்றும் துணை முதல்வராக மனிஷ் சியோடி உள்ளார். சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் ஒருவர் பின்  ஒருவராக ஊழல் வழக்கில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்தியேந்தர் ஜெயின் சட்டவிரோதமாக முறையில் பண பரிமாற்றம் செய்துள்ளார். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக இந்த ஊழல் வழக்கில் துணை முதல்வர் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மதுபான கொள்முதல், வரி விதிப்பு போன்றவற்றில் இருந்த பழைய கலால் கொள்கையில் மாற்றம் செய்தனர். புதிய கலால் முறையை கொண்டு வந்தனர். இந்த புதிய கலால் முறையில் மதுபான தொழிற்சாலைகளுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்த வரி விலக்கு மற்றும் சலுகைகள் அமல்படுத்தியதனால் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர்.

இதுகுறித்து துணை முதல்வர் மணிஷ் சியோடிய வீட்டில் புலனாய்வுத்துறை சோதனை செய்தது. இவருடைய வங்கி லாக்கர் முதற்கொண்டு அனைத்திலும் சோதனை நடத்தினர். மேலும் இவருடன் சமீபத்தில் நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் பெயரில் இவர் உட்பட பதினாறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மனிஷ் சியோடியாவை இன்று விசாரணைக்கு புலனாய்வுத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி கூறியுள்ளனர். அவ்வாறு ஆஜராகும் பட்சத்தில் அவரை கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.