Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!!

Photo of author

By Rupa

Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பானது பல்வேறு துறைகளுக்கான பயிற்சி அளித்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் புகார் வந்துள்ளது. இவ்வாறு புகார் வந்ததையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சோதனை செய்ய  ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக மதுரையில் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வீட்டிலும் தேசிய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் புலனாய்வுத் துறையினர் செய்யும் சோதனையை எதிர்த்து பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட்டனர். கடந்த 13ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.