Breaking: திமுக அரசு தவறுக்கு 10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.. பிரியா உயிரிழப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனியான பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பல நாட்களாக மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் பிரியாவை பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்.
பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜவ்வு கிழிந்து விட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவருக்கு வலி குறையவில்லை. இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இவரை அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவரின் திசுக்கள் அனைத்தும் அழுகிக் கொண்டு வருகிறது அதனால் இவரது காலை எடுத்தாக வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
பிறகு அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலை எடுத்து உள்ளனர். இன்று காலையில் கூட மனம் தளராமல் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நான் மீண்டும் வந்து விடுவேன் கவலை கொள்ளாதீர்கள் என்று பிரியா பதிவிட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்து விட்டார்.இதற்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் பிரியா உயிரிழந்ததாக பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டினர. மேலும் இதனை எதிர்த்து பல கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனது பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,
சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.(1/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 15, 2022
விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் நாட்டின் சொத்துகள். அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் நாட்டின் சொத்துகள். அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!(2/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 15, 2022
கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல… அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
https://twitter.com/draramadoss/status/1592395404158861314
கால்பந்து விளையாட்டு வீராங்கனை இழப்பிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்பொழுது பாமக அனும்புமணி ராமதாஸ் அவர்களும் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சி தலைவரை போல இவரும் பிரியா குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.