Breaking: 3 வயது குழந்தையின் மீது வேன் ஏறி விபத்து! வீட்டின் முன்பே அரங்கேறிய சோகம்!!
மதுரை மாவட்டத்தில் 3 வயது குழந்தையின் மீது தனியார் வேன் ஏரி இறங்கியதில்,சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பரவை பகுதிக்கு அருகில் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த செந்தில்குமார் ரேவதி என்ற தம்பதியினருக்கு 3 வயதில் பொன்ராம் என்ற சிறிய குழந்தை உள்ளது.தந்தை செந்தில்குமார் வேலைக்கு சென்ற நிலையில் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது பெண் ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்ல, தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று அவ்வழியாக வந்தது.குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது தெரியாமல் வேன் ஓட்டுநர் குழந்தையின் மீது வண்டியை விட்டுவிட்டார்.அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தம் கேட்கவே வேன் ஓட்டுநர் வண்டியை நிறுத்தி பார்த்த பொழுது குழந்தையின் தலைப்பகுதியில் வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கி குழந்தை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.மேலும் இக்குழந்தையை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வேனை கவனக் குறைவாக ஓட்டிச் சென்ற சேக் அப்துல்லா என்ற ஓட்டுநரை சமயநல்லூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.