BREAKING: 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மாறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி!!

0
443
BREAKING: 3 years in jail for buying Rs 10 and Rs 20 coins!!
BREAKING: 3 years in jail for buying Rs 10 and Rs 20 coins!!

BREAKING: 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மாறுத்தால் 3 ஆண்டுகள் சிறை உறுதி!!

கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்து 2009-இல் புழக்கத்தில் விட்டதுல்.ஆனால் ரூ.1,ரூ.2,ரூ.5 நாணயங்களை போல் இந்த 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

ரூ.10 நாணயம் போலி என்று பரப்பப்படும் வதந்திகளே இதற்கு காரணம்.10 ரூபாய் நாணயங்களில் பல வடிவமைப்புகள் இருக்கிறது.வடிவமைப்பின் காரணமாக 10 ரூபாய் நாணயம் போலி என்று சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகினறனர்.

நகர் மற்றும் கிராமப்புற கடைகள்,பேருந்துகளில் கூட 10 ரூபாய் நாணயம் மறுக்கப்படுகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.தற்பொழுது ரூ.20,ரூ.75 போன்ற நாணயங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.10 ரூபாய் நாணயத்தை போல் இந்த நாணயங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுகுறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ரூ.10, ரூ.20 ரூபாய் ஆகிய நாணயங்களை வாங்க மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.ரூ.10,ரூ.20 நாணயங்களை வாங்க மறுபவர்களுக்கு அபாரதத்துடன் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது.இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம்,சமூகம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக நாணயங்களுக்கு பல்வேறு வடிவங்களும் அளிக்கப்படுகின்றன. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் காரணத்தால் பல்வேறு வடிவங்களும் கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பானது.எனவே மக்கள் அதனை போலியான நாணயம் என நம்பத்தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன என்றும்,அவை செல்லாது என்றும் பல வதந்திகள் மக்களிடையே காணப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே போதியே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களின் தொலைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் விடுத்து,அதனை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது.

மேலும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெற 14440 என்ற கட்டணமில்லா சேவையை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது.03.05.2024 தேதிபடி ரூ.10 நாணயங்கள் 69,696 இலட்சம் நாணயங்களும்,ரூ.20 நாணயங்கள் 15,963 இலட்சம் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும்,அவற்றை செல்லாது என கூறுவதோ,அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ,வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 124A -வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம்.அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயத்தை அவமதிக்கும் வகையில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுருக்கிறது.