#BREAKING: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக!! “பிரதமர்” பதவியை ராஜினாமா செய்த மோடி!!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று(ஜூன் 04) அன்று வெளியானது.இதில் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.தனிப்பெரும்பான்மை கிடைக்க 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில் பாஜக(240) மற்றும் காங்கிரஸ்(99) ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க மேலும் 38 தொகுதிகள் தேவைப்படுகின்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரும்பான்மையை விட கூடுதலாக 20 இடங்கள் இருப்பதால் அக்கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான 17வது மக்களவையை கலைப்பது,3வது முறை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரும் கடிதம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்பத்தடைத்துள்ளார்.
மேலும் வருகின்ற ஜூன் 07 அன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி அவர்கள் மக்களவை தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கின்றார்.இதன் பின்னர் மக்களவை குழுத் தலைவர் என்பதன் அடிப்படையில் குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி ஜூன் 08 ஆம் தேதி மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்க உள்ளார்.