BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பொழுது பரப்புரை ஒன்றில் ராகுல் காந்தி அவர்கள் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.அதிலும் 2005 ஆம் ஆண்டு அரங்கேறிய என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா குற்றம் சாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.
பலரும் அந்த என்கவுண்டருக்கு அமித்ஷா முக்கிய காரணம் என்று கூறி வந்தனர். ஆனால் அதிலிருந்து எந்த ஒரு ஆதாரமும் இன்றி முன்ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.இது குறித்து ராகுல் காந்தி பரப்புரையின் போது பேசியுள்ளார். ராகுல்காந்தி இவாறு பேசியது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேற்கொண்டு இந்த வழக்கானது தற்பொழுது வரை நடைபெற்றும் வருகிறது.
அதில் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா-வை குறித்து அவதூறாக பேசியயதால் பிடியாணைக்கு உத்தரவிடும் படி வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி இதற்கு எந்தவொரு விளக்க மனுவும் தாக்கல் செய்யவில்லை. இதற்காக கால தாமதம் செய்ததால் தற்பொழுது கொல்கத்தா உயர்நீதிமன்றம் ராகுல்காந்திக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.இதற்கு ரூபாய் 1000 அபராதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதே போல தான் மோதி என்று பிரதமரின் சாதியை இழிவுப்படுத்தி பேசியதாக இவரது பதவியே பறிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.