திமுக எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Photo of author

By Sakthi

இந்தியா முழுவதும் கொரோனா குறைந்து வந்திருக்கின்ற நிலையில், மறுபடியும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ,ஆம்பூர் தொகுதி திமுக சட்டசபை உறுப்பினர் விஸ்வநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவருக்கு உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே அவர் திருப்பத்தூரில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர் விஸ்வநாதன் அந்தக் கட்சியின் சார்பாக கடந்த 2019 ஆம் வருடம் நடந்த இடைத்தேர்தலில் 96 ஆயிரத்து 455 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.