Breaking:! கேஸ் சிலிண்டர் வெடிப்பு! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!!

Photo of author

By Pavithra

Breaking:! கேஸ் சிலிண்டர் வெடிப்பு! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!!

Pavithra

கேஸ் சிலிண்டர் வெடிப்பு:! 7 பேர் கவலைக்கிடம்! சேலம் அருகே பரபரப்பு!!

கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்து மாத குழந்தை உட்பட ஏழு 10 படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதி அண்ணாநகர் 3-வது குறுக்கு சந்து பகுதியில் ஜெகதீஷ் என்பவரின் வீட்டின் மாடியில் மாணிக்கம் என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகள்கள் பானு,பிரியா பேரக் குழந்தைகள் தீட்ஷிதா மற்றும் அபினேஷ் மற்றும் 10 மாத கைக்குழந்தையுடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இன்று காலை (அக்டோபர் 17) ராஜேஸ்வரி டீ போடுவதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார்.ஆனால் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து வீட்டினுள் இருந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

காலை நேரத்திலேயே அதிக சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.மேலும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள்,பொதுமக்களுடன் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கிய ஏழு பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 10 மாத குழந்தை உட்பட ஏழு பேருக்கும் தீக்காயம் மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

காலை நேரத்திலேயே அதிக சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அக்கம் பக்கத்தினர் கூட்டமாக திரண்டனர் மேலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.