BREAKING: பட்டய கணக்காளர் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த இணையதளத்தில் சென்று முடிவுகளை பார்க்கலாம்!

0
167
BREAKING: Important Information for Chartered Accountant Candidates! Visit this website and see the results!
BREAKING: Important Information for Chartered Accountant Candidates! Visit this website and see the results!

BREAKING: பட்டய கணக்காளர் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த இணையதளத்தில் சென்று முடிவுகளை பார்க்கலாம்!

கடந்த  2022 ஆண்டு ஜூலை மாதம் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம்  பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் நவம்பர் 2022 இறுதி தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது.அந்த அட்டவணையில் அறிவிக்கப்பட்ட படி குரூப் 1 க்கான சிஏ இன்டெர் தேர்வானது கடந்த நவம்பர் 2,4,6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்றது.மேலும் இது போன்று குரூப் 2 க்கான சிஏ இன்டெர் தேர்வு கடந்த நவம்பர் 11,13,15 மற்றும் 17, 2022 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

மேலும் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ICAI வின் அதிகாரி ஒருவர் டுவிட்ரில் பதில் அளித்திருந்தார்.அப்போது அவர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைநிலை மற்றும் நவம்பர் 2022 இறுதி தேர்விற்கான முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாகும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பட்டய கணக்காளர் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது.இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனமானது நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான CA இறுதி மற்றும் இடைநிலை தேர்வர்கள் https://icai.inc.in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வில் டெல்லியை சேர்ந்த ஹர்ஷ் சவுத்ரி முதல் இடத்தை பிடித்துள்ளார்,இடைநிலை தேர்வில் அரியானாவை சேர்ந்த தீஷா கோயல் என்பவர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleகம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 
Next articleகேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!