# Breaking News: கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பலி!

Photo of author

By Kowsalya

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள குறுங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது வேலையில் இருந்த 5 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் நாட்டு பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்த கட்டிடம் முழுவதுமே இடிந்து விழுந்துள்ளது.

மேலும் வெடிமருந்துகள் இருந்துள்ளதால் திடீரென வெடித்து 5க்கும் மேற்பட்டோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவரின் உடல் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணியில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பட்டாசு ஆலைக்கு முறையான உரிமம் பெறவில்லை என புகார் எழுந்துள்ளதை அடுத்து இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.