Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

Photo of author

By Parthipan K

Breaking News: பாஜக மாநிலத் துணைத்தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்!!

Parthipan K

கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் பாஜகவின் மாநில துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பணி நியமனம் செய்து வைத்துள்ளார்.

 

அண்மையில் நான்கு நாட்களுக்கு முன்னாடி ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவராக பணி நியமனம் பெற்றுள்ளார்.

 

இந்த நிகழ்வானது, பாஜகவில் உள்ள மூத்த நிர்வாகிகள், ஏற்கனவே கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சற்று கால் புணர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் அவர் கட்சியில் இணைந்த நான்காவது நாட்களிலேயே இவ்வாறு பணி நியமனம் பெறுவது பாஜக கட்சிக்குள் மூத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மேலும் பாஜக கட்சியில் இளைஞர்களின் வரவேற்பை பெற்றுள்ளதால் அவர்களுக்கு வழிகாட்டியாக அண்ணாமலை இருக்க வேண்டும் என்பதால் மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மாநில துணைத்தலைவர் பணி நியமனம் பெற்றுள்ளார் என்பது வரவேற்பதாக இருக்கும் என கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள்.